உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சற்றுமுன் யோஷித ராஜபக்ஷ கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது நிலுவையிலுள்ள நிதி மோசடி மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பான விசேட விசாரணை ஒன்றின் கீழ், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

யோஷித ராஜபக்ஷ நேற்று (16) ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருக்க வேண்டிய நிலையில், நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் சம்பந்தப்பட்ட மற்றுமொரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால் அவரால் சமூகமளிக்க முடியாமல் போனது.

இந்தத் தடையை அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிற்கு முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையிலேயே, இன்று காலை அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னதாக ‘சிஎஸ்என்’ (CSN) தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் நிதிப் பயன்பாடு மற்றும் சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இது தொடர்பான விசேட விசாரணைகள் நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற பின்னணியில், இன்றைய தினமும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரிடம் பல மணிநேரம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதோடு, அவரைக் கைது செய்துள்ளனர்.

இவ்விசாரணையின் மேலதிக அறிக்கைகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0