உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வார இறுதி விடுமுறை தினங்களில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர், அவரது சாரதியுடன் பிரதேச சபையின் வாகனத்தை எடுத்துச் சென்று சாரத்தியம் பழகியுள்ளார். இது ஒரு ஊழல் செயற்பாடாகும்.

தவிசாளர் சாரத்தியம் பழக வேண்டும் என்றால் சாரதி பயிற்சி பாடசாலைகள் உள்ளன. அங்கு பயிற்சி பெறலாம். ஆனால் இவ்வாறு பிரதேச சபையின் வாகனத்தை விடுமுறை தினங்களில் பயன்படுத்தி ஊழல் புரிந்துள்ளார். இதன்போது மக்களது வரிப்பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதாக வந்த தேசிய மக்கள் சக்தி அரசுக்கு இது ஒரு ஊழலாக தெரியவில்லையா? கடந்த காலங்களில் சனி, ஞாயிறு தினங்களில் வாகனம் பிரதேச சபையில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படுகிறது, எத்தனை மணிக்கு திரும்பி வருகிறது போன்ற சிசிடிவி காட்சிகளை விசாரணைக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

இதேவேளை பிரதேச சபையின் காணிக்குள் இருந்து வாழைக்குலைகழையும் அவர் தனது வீட்டு தேவைக்கு எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதேபோல் பல ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை நான் சபையில் முன்வைத்தும் அவர் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் தவிசாளர் மீது முன்வைக்கப்படும்போது தவிசாளர் அவற்றை திருத்திக் கொள்ளாமல் பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

23 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

67 0 0