உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
60 பார்வைகள்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி தேர்தல் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் வரையான வழித்தடத்தில் மாணவர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சேவை ஆரம்பிப்புத் தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவிக்கையில்,
‘பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்துவது எமது முக்கிய பொறுப்பாகும்.

அந்தவகையிலேயே இந்த ‘சிசு செரிய’ பேருந்து சேவை வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இந்த விசேட போக்குவரத்துச் சேவையானது மிக விரைவில் வடக்கு மாகாணத்தின் ஏனைய அனைத்து இடங்களிலும் உடனடியாக ஆரம்பிக்கப்படும். இதற்கான வேலைத்திட்டங்களை வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது,’ என உறுதியளித்தார்.

மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், பெற்றோரின் போக்குவரத்துச் சுமையைக் குறைக்கும் வகையிலும் இந்தத் திட்டம் வடக்கு மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0