உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டிலேயே நடக்கும்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
36 பார்வைகள்

    2026 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தினார்.

    நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல,

    “பல்கலைக்கழக அனுமதிக்கு பிரதானமான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை முதன்முறையாகப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை முழுமைப்படுத்த வெறும் 20 மாத காலமே கிடைத்துள்ளது.

    கடந்த காலங்களில் இதற்காக 27 முதல் 31 மாதங்கள் வரை அவகாசம் இருந்தது. அத்துடன், கடந்த வருடம் நிலவிய சீரற்ற காலநிலையால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமையால், பரீட்சையை 2 அல்லது 3 மாதங்களுக்குப் பிற்போடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    அதேபோன்று, இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் வழமையாகப் பெறுபேறுகள் வெளியாகி அடுத்த பரீட்சைக்குத் தயாராக 6 மாத காலம் கிடைக்கும்.

    ஆனால், இம்முறை அவர்களுக்கு 4 மாதங்களே கிடைத்துள்ளமையால், மாணவர்களின் நலன் கருதிப் பரீட்சையை ஒத்திவைத்து கால அவகாசம் வழங்க வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.

    இதற்குப் பதிலளித்துப் பேசிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன,

    “உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி ஒருசில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது குறித்துப் பரீட்சைகள் திணைக்களத்துடன் தொழில்நுட்ப ரீதியிலான விரிவான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.

    கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் இருந்து நாட்டின் பிரதான தேசிய பரீட்சைகள் இரண்டும் (உயர்தரம் மற்றும் சாதாரண தரம்) கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கால அட்டவணைகள் சீர்குலைந்துள்ளன.

    இவற்றை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வராவிட்டால், அது ஏனைய பள்ளிப் பரீட்சைகளையும், பல்கலைக்கழகப் பரீட்சைகளையும் சங்கிலித் தொடராகப் பாதிக்கும்.

    எனவே, கடந்த காலங்களில் பிற்போடப்பட்ட தேசிய பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்தி, கல்வித்துறையை வழமைக்குக் கொண்டுவர அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படியே இம்முறை உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடத்தப்படும்.” – என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

    தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

    24 0 0
    இலங்கை செய்திகள்

    மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

    அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

    46 0 0
    இலங்கை செய்திகள்

    காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

    இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

    72 0 0
    இலங்கை செய்திகள்

    உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

    உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

    65 0 0