உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
108 பார்வைகள்

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் கலந்துகொண்ட சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய கலந்துரையாடலை அடுத்து, அரசு இந்த இரு தரப்பினரையும் கண்டி ‘சஹஸ் உயன’ பகுதிக்கு அழைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பகிரங்கமாகக் கூறியது. இருப்பினும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்புகளை நடைமுறைப்படுத்த அரசு தவறிவிட்டது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயரை ‘சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்’ எனப் பெயர் மாற்றுவதை மட்டுமே அரசு செய்துள்ளது. மார்ச் மாதத்தில் தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அது இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

தேர்தல் சமயங்களில் இவர்களை நெறிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சியும் இந்த இரு தரப்பினரையும் ஏமாற்றியுள்ளார்.

அரசு இவர்களை மறந்துவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை எப்போதுமே மறக்காது. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடலில் நீராடச் சென்ற இந்தியப் பிரஜை நீரில் மூழ்கி உ**யிரிழப்பு.!

கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியர் என பொலிஸார்…

92 0 0
இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்து.!

வெலிகம, மிதிகம பிரதேசத்திலுள்ள புகையிரதக் கடவையொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து மாத்தறை…

100 0 0
இலங்கை செய்திகள்

வேலணை பிரதேச சபையின் 2027 பாதீடு நிறைவேற்றம்.!

22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை…

104 0 0
இலங்கை செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்; இறுதி முடிவை அவசரப்படுத்த வேண்டாம்.!

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் அவசியம்; சிவில் தரப்பினரையும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என இலங்கைத்…

105 0 0