உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
60 பார்வைகள்

வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்த இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புத் திட்டங்களின் வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி வழங்கத் தயாராகவுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி வடக்கை ஒரு புதிய வர்த்தக, முதலீட்டு, பொருளாதார மையமாக மாற்றும் வாய்ப்புகளுக்கு வடக்கு மாகாணத்தின் அரச பொறுப்பாளராகப் பணியாற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முட்டுக்கட்டை போடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு தேசிய உட்கட்டமைப்புத் திட்டங்களையும், பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த பலனைத் தராத மத்தல வானூர்தி நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய தோல்வியடைந்த திட்டங்களுடன் மறைமுகமாக ஒப்பிடுவது அறிவீனமானது என்றும், பலாலியும் காங்கேசனும் மத்தல, அம்பாந்தோட்டையை விடப் பழமையானவை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தன்னை இனவாதத்துக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டாலும், வடக்கு எப்போதும் கொழும்பையே சார்ந்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மை அவரிடம் ஆழமாக இருக்கின்றது என்றும், இது அப்பட்டமான அரசியல் இரட்டை வேடம் என்றும் மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.

இந்தியா நிதி உதவி வழங்கத் தயாராக உள்ள நிலையில், பலாலி வானூர்தி நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியைத் தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் அவர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வட இலங்கையைக் கொழும்பைச் சார்ந்திருக்கும் ஒரு பிராந்தியமாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் நேரடியாக இணைந்த புதிய பொருளாதார மையமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்கள் வடக்குக்கு நேரடியாகப் பயணிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், வடக்கின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி என்பதை மறக்கக் கூடாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
……………………

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

60 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

54 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

39 0 0