உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மஸ்கெலியாவில் முன்பள்ளியை பூட்டி வைத்து தோட்ட நிர்வாகம் அராஜகம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் திகதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட முன்பள்ளியானது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சமூக நிறுவனம் ஒன்றினால் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கட்டி எழுப்பப்பட்டு தேவையான சகல வசதிகளையும் வழங்கி சிறப்பாக நடத்தி வந்த இவ்வேளையில் தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தை குறிப்பிட்ட முன்பள்ளியில் நடத்துவதற்காக திட்டமிட்டு தோட்ட அதிகாரியினால் இச்செயற்ப்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதற்கு முன் குறிப்பிட்ட தோட்டத்தில் முன்பள்ளி ஒன்று இல்லாத குறையினை நிவர்த்தி செய்வதற்காக கடந்த 20 வருடத்திற்கு முன் இதனை கட்டியெழுப்பி சிறப்பாக நடத்தி வந்த இத்தருணத்தில் தோட்டத்தில் தொழில் புரியும் மற்றும் தொழில் செய்யாத அனைத்து குடியிருப்பாளர்களது பிள்ளைகளும் கல்வி கற்று வந்த இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்ட முன்பள்ளியானது மத்திய மாகாண முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடமாக முன்பள்ளி நிரந்தர பதிவிற்கு உள்வாங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

குறிப்பிட்ட முன்பள்ளியை நடத்தி வந்த சமூக நிறுவனம் கடந்த 11-ம் திகதி மஸ்கெலியா போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதுடன் ஹட்டன் மனித உரிமை காரியாலயத்திற்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மேலும் இவ்விடயத்தை சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் போன்றவற்றுக்கும் இது தொடர்பாக அறிவிப்பதற்கு தயாராகி வருகின்றது.

முன்பள்ளி கட்டிடத்தை அமைப்பதற்காக அனுமதி கொடுத்திருந்தாலும் தற்போது அதற்கான காணி உறுதி பத்திரம் இம்மை காரணமாக இந் நடவடிக்கையை சாதகமாக பயன்படுத்துவதற்காக தோட்ட நிர்வாகம் முனைந்து வருவதாக தெரிய வருகின்றது.

கடந்த காலங்களில் தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று அதில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட இத்தருணத்தில் தொடர்ச்சியாக தொழிலாளர்களையும் அங்குள்ள மக்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்காக இவ்வாறான செயற்பாடுகளை தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0