உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்.!

Uncategorized 4 மாதங்கள் முன்
65 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல்வாதிகளும், தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும், சுரேஷ் சலேவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச,
“மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இந்த நாட்டுக்காகப் பாரிய சேவையாற்றிய ஒரு சிறந்த அதிகாரி ஆவார். ஆனால், இன்று புலம்பெயர் புலி அமைப்புகளின் தேவைக்காகவும், அரசியல் பழிவாங்கலாகவும் அவர் பழிவாங்கப்படுகின்றார். தடுப்புக் காவலில் அவர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வருகின்றார். அவருக்குச் முறையான நீதி கிடைக்கும் வரை இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த விசாரணைகள் சட்டப் படியும், முறையான வடிவத்திலும் நடக்க வேண்டுமே தவிர, பழிவாங்கலாக அமையக் கூடாது” – என்றார்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுரேஷ் சலேவின் தாயார் ஊடகங்களுக்கு முன்னால் கண்ணீர் மல்க மிகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

அவர் குறிப்பிடுகையில், “இலங்கைத் தாய்மார்கள் எவரும் இனி தங்களது பிள்ளைகளை இராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்வரக் கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டுக்காக உயிரைக் கொடுத்து உழைத்த என் மகனுக்கே இன்று இந்த நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. நீங்கள் மீறி உங்கள் பிள்ளைகளை இராணுவத்துக்கு அனுப்பினால், எதிர்காலத்தில் என்னைப் போன்றே நீங்களும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டிய அவல நிலை ஏற்படும்” – என்று அழுதுகொண்டே தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உடல்நிலை மோசமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

108 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

197 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0