சவூதி எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல்!
சவூதி அரேபியாவின் கிழக்கு – மேற்கு எண்ணெய் குழாய் மார்க்கத்தில் அமைந்துள்ள இரண்டு எண்ணெய் உற்பத்தி ஆலைகளை குறிவைத்து ஐந்து ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் கட்டமைப்பைக் குறிவைத்து ஈரான் ஆளில்லா வானூர்தித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளம் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவத் தகவல்களின்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ஏவுகணை ஏவுதளமே இந்தத் தாக்குதலின் இலக்காக இருந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்கில் நிலவும் இராணுவப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


