சாட்டியில் மாவீரர் நினைவேந்தலை தடை செய்யுமாறு பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.!
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் மாவீரர் தினத்தை நடாத்துவதை தடை செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாரால் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணிகளான கனகரத்தினம் சுகாஷ், பெலினா, ஸ்ரீராகவன், அஜித்சங்கர், கௌரிதரன், நிரோசன், மதிவதனி சூரியகாந்த் ஆகியோர் ஆஜராகினர்.
இதன்போது, இறந்த உயிர்களை நினைவுகூருவதை எந்தவொரு சட்டத்தாலும் தடைசெய்ய முடியாது என்று மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் அந்த உரிமை அரசியலமைப்பிலும், சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்களையோ, இலச்சினைகளையோ பாவிக்காது நினைவேந்துவது சட்டவிரோதம் ஆகாது என்று நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
அந்தவகையில் சாட்டி துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்குத் தடைகோரிய பொலிஸாரின் வழக்கு, இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.


