உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை – விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

Uncategorized 4 மாதங்கள் முன்
70 பார்வைகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது மகனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருடன் பெற்றோர் தங்கியிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் விளையாட்டு மைதான ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்பந்து கோல் போஸ்ட் ஒன்று இடைவேளை நேரத்தில் சாய்ந்து விழுந்ததால் தரம் 09 இல் கல்வி கற்கின்ற ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் மூத்த புதல்வர் ஆஷிப் மௌலானா என்பவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

மறுநாள் 26 ஆம் திகதியன்று ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவும் அவரது மனைவியும் வைத்தியசாலையில் தங்கியிருந்து தமது மகனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான முன்னாயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் வீட்டில் எவருமில்லாத நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரவு 7.00 மணியளவில் சாய்ந்தமருது அல்ஹிலால் வீதி, ஜின்னா லேனில் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானா அவதானித்துள்ளார்.

இதன்போது வீட்டின் பின்பக்கமாக அமைந்துள்ள குடியிருப்பாளர்கள் அற்ற வீடு -வழியாக இவரது வீட்டின் பின்பக்கமாகவுள்ள சமையலறைக் கதவுகளை உடைத்து உள்நுழைந்துள்ள திருடன் படுக்கையறை மேசையில் இருந்த லெப் டொப் ஒன்றையும் படுக்கையறையில் உள்ள அலுமாரியை உடைத்து 75 ஆயிரம் ரூபா பணத்தையும் பெண்ட்ரைவ் இரண்டையும் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக, பொலிஸார் பல தடவைகள் சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பகுதியிலுள்ள CCTV காட்சிகளைப் பரீட்சித்து வருகின்ற அதேவேளை, தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷேட குழுவொன்றும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

108 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

197 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0