உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை மாணவர்களுக்கு விநியோகித்த இருவர் கைது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவமானது செவ்வாய்க்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் நடமாடிய 2 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் பொலிஸார் தமது உயிரை பணயம் வைத்து அச்சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.

குறித்த 36 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய சென்ற நிலையில் சந்தேக நபர் பொலிஸாரை தாக்க முற்பட்டதுடன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.

பின்னர் நீண்ட தேடுதலின் பின் மீண்டும் அச்சந்தேக நபர் கைதானார்.

இதன்போது இச்சம்பவத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் இடது காலில் காயமடைந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்திருந்தார்.

மேலும் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சூட்சுமமாக விநியோகத்து வந்த மற்றுமொரு 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் அன்றைய தினம் இரவு கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைதான குறித்த 2 சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸார் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமையமுன்னெடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

40 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

56 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0