உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் பருத்தித்துறை பகுதியில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் ஈகைச்சுடர் ஏற்றிவைக்க மாவீரரின் சகோதரரான சி.வேந்தன் மலர் மாலை அணிவித்தத்தை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்ட அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.

நினைவுரைகளை சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் உறுப்பினரும், ஊடகவியலாளருமான சி. த.காண்டீபன், மாவீரரின் சகோதரனும் அரசியல் செயற்பாட்டாளருமான சி. வேந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதில் பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன், நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ. முரளிதரன் உட்பட அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் குடத்தனை வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி, சமூக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0