உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குடும்பத் தகராறு முற்றியதால் மனைவியை கொ*லை செய்த கணவன்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியைக் கணவரே கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்டகாலமாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. நேற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளதுடன், இதன்போது ஆத்திரமடைந்த கணவன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான கணவனை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காகப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0