புதையல் தோண்டிய மூவர் கைது.!
சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய மூன்று சந்தேகநபர்கள், அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் தெஹியத்தகண்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டிய – முவகம்மன பகுதியில் நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 24, 27 மற்றும் 37 வயதுடைய அக்குரஸ்ஸ, போகஸ்வெவ மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.