உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று காலை 9:00 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமானது.

வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் தலைமையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு வரவேற்புரை இடம்பெற்றது. தலைமை உரையினை நிகழ்வின் தலைவரும் வடமராட்சி கல்வி வலய பணிப்பாளருமான கனகசபை சத்தியபாலன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து சிறப்புரையினை நிகழ்வின் பிரதம விருந்தினரும் வடக்கு மாகாண விளையாட்டு துறை பணிப்பாளருமான பாலன் முகுந்தன் நிகழ்த்தியதை தொடர்ந்து விளையாட்டுக்களை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் போட்டிகளை கண்டுகளித்தனர். போட்டிகள் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0