உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தோல்வி பயத்தால் தேர்தலை பிற்போடப் பார்க்கின்றது அரசு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால், எல்லை நிர்ணய விவகாரத்தைக் காரணம் காட்டித் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டு மக்கள் தற்போது ஒவ்வொரு மாத இறுதி நாட்களையும் அச்சத்துடன் தான் எதிர்கொள்கின்றார்கள். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைக் காரணம்காட்டி, ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு அரசு தேவையில்லை என்றும், புறக்கோட்டை மொத்த விற்பனை வியாபாரிகளாலேயே விலையை அதிகரிக்க முடியும் என்றும், தமக்கு அரசு தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்பு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த கால அரசுகள் வெளியகக் காரணிகளால் நெருக்கடிக்குள்ளான போது, ஜே.வி.பியினர் அவ்வாறு செய்யலாம், இவ்வாறு செய்யலாம் என்று பாடம் கற்பித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் சர்வதேச நாணய நிதியம் கற்பிக்கும் பாடத்துக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒட்டுமொத்த மக்களும் கடனாளியாக்கப்படுகின்றார்கள். நாணய நிதியத்தின் கட்டளைக்கு அமைவாகவே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகின்றது. இதனால் அரசின் மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள்.

அரசின் மீதான மக்களின் இந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிடுகின்றார். ஆனால், அவரது கருத்துக்கு முரணாக, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தலுக்கு நிதி நெருக்கடி ஏதுமில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

எனவே, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இவர்களில் யார் குறிப்பிடுவது உண்மை என்பதை அரசு நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். எங்களைப் பொறுத்தவரை ரில்வின் சில்வா குறிப்பிடுவதுதான் உண்மை.

இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது. அவ்வாறு நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால், எல்லை நிர்ணய விவகாரத்தைக் குறிப்பிட்டுக் கொண்டு அரசு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0