உணவு ஒவ்வாமை காரணமாக 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!
நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாகவும் இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களுக்கு தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் நுவரெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.