உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
43 பார்வைகள்

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

வடக்கு மாகாணத்தில் இருந்து பிரபாகரன் ரதுக்ஸன், நகுலேஸ்வரன் சிறீஹரிஸ், லெனின் சானுராஜ், முஹமட் றிலாஸ், புஸ்பநாதன் அஜந்தா ஆகிய வீர வீராங்கனைகள் இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நேற்றுமுன்தினம் பங்குபற்றினர்.

குத்துச்சண்டையில் எட்டு வகைகள் காணப்படுகின்ற நிலையில், இதுவரை வடக்கு – கிழக்கில் இருந்து எவரும் பங்கெடுக்காத வகையிலான குத்துச்சண்டை போட்டியிலேயே அவர்கள் பங்கெடுத்து சாதனையை நிலைநாட்டி நாடு திரும்பினர்.

அவர்களது பயிற்றுவிப்பாளரான தியாகராஜா நாகராஜா என்பவரும் அவர்களோடு உடனிருந்து போட்டியின்போது அவர்களை வளிப்படுத்தினார்.

குறித்த போட்டியில் பங்குபற்றுவதற்கு செல்வதற்கு எவரும் நிதி உதவி வழங்காத நிலையில் கடன்பட்டும், வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்துமே சில போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டதாக அந்த வெற்றியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே இந்த கலையினை வளர்ப்பதற்கும், சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்குமான ஏற்பாடுகளை அரசாங்கம் உட்பட ஏனைய தரப்பினர் இணைந்து செய்யவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0