உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கிடையில், எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, ஓர் இடைக்கால பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவிருக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதன்படி, வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீத கட்டண உயர்வை அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0