மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.
மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மாலை 5 30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் தோட்ட நடு தோட்ட பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார கருத்துத் தெரிவிக்கையில்,
கிறிஸ்தவ தேவாலயத்தை மேலும் விஸ்தரிப்பு செய்ய தளம் வெட்டி எடுத்து கொண்டு இருக்கும் வேலையில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் மண் திட்டுகுள் அகப்பட்டு ஆபத்தான நிலையில் மஸ்கெலியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வேளையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு மரணித்தவர் பெரிய நடுதோட்ட கிறிஸ்தவ மத போதகர் ராஜேந்திரன் கோபிநாத் வயது 41 ஒரு குழந்தையின் தந்தை ஆவார்.