உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

திருக்கேதீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது.

இன்று காலை வசந்த மண்டபத்தில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து கொடி தம்பத்திற்கு எழுந்தருளப் பட்டு, கொடிக் கம்பத்தில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.

அதனைத் தொடர்ந்து உள் வீதி உலா இடம் பெற்றதன் பின்னர் பாலாவி தீர்த்த கரைக்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்த உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்கள் செலுத்துவதற்காக பாலாவி தீர்த்தத்தில் இருந்து தீர்த்த செம்புகளில் தீர்த்தங்களை எடுத்து மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

42 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0