உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சத்திர சிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“சத்திர சிகிச்சைக்காக உதவி கோரும் முன்னாள் போராளிகளுக்கு உங்களால் உதவ முடியாவிட்டாலும், தயவுசெய்து அவர்களைக் கொச்சைப்படுத்தி உபத்திரம் செய்யாதீர்கள்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய அரசியல்வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் போராளி ஒருவர் தனது சத்திர சிகிச்சைக்காக ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களிடம் அண்மையில் நிதியுதவி கோரியிருந்தார். இதற்குப் பல தரப்பினரும் தாராளமாக உதவிக்கரம் நீட்டியிருந்த போதிலும், ஒரு சில நபர்கள் சமூக ஊடகங்கள் வழியாக அந்தப் போராளியைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவாஜிலிங்கம் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“அன்பும் பாசமும் மிக்க தமிழ் மக்களே! எனக்கு நீங்கள் வாரி வழங்கிய உதவியைப் போல, தமது இளமைக் காலத்தைத் தமிழ்த் தேசியக் கொள்கைக்காக அர்ப்பணித்துப் போராடி, தற்போது வாழ்வாதாரத்தை நகர்த்த முடியாமல் தவிக்கும் ஏனைய போராளிகளுக்கும் உதவிக்கரம் நீட்டுங்கள்.

அதற்கு முதற்கட்டமாக, சத்திர சிகிச்சைக்காக உதவி கோரியிருந்த இருபாலையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு, எனது சிகிச்சைக்காகப் பொதுமக்களால் வழங்கப்பட்ட பணத்திலிருந்து இரண்டு இலட்சம் (2,00,000) ரூபாவினை நான் பகிர்ந்து வழங்கியுள்ளேன்.

முன்னாள் போராளிகள் தங்களின் மருத்துவ மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காகப் போராடி வரும் நிலையில், அவர்களுக்குச் சமூக ரீதியான ஆதரவு தேவைப்படும் இவ்வேளையில், அவர்களைக் காயப்படுத்தும் செயல்களைத் தவிர்க்குமாறு தமிழ் நெஞ்சங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0