உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் காரியாலத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஸ்குமார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த 21ம் திகதி டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநரை பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் வைத்து வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதன்போது செய்தி சேகரிப்பதற்கு அங்கு சென்றிருந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை மற்றும் ஊடகவியலாளரின் தொலைபேசியை பறித்து பதிவு செய்திருந்த காணொளிகளை அழித்தமை, ஊடகவியலாரின் தனிப்பட்ட வட்ஸப் மெசேஜ்களை பரிசோதித்தமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளின் ஊடாக ஊடகவியலாளரின் மனித உரிமைகளை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0