உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நுவரெலியாவின் இராகலை மஹகுடுகலை, அப்பிள் பாம் பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர், ஹைபொரஸ்ட் இல.01-ஐச் சேர்ந்த மகாலிங்கம் சித்திராதேவி எனத் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்குச் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும் மீண்டும் அவர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்பிள் பாம் பிரதேசத்தில் அமைந்துள்ள மரக்கறித் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த குறித்த பெண், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசை போன்ற கொட்டில் ஒன்றிற்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் ஹக்கபடஸ் வெடித்ததில் பெண் காயமடைந்திருக்கலாம் என இராகலை பொலிஸார் சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இராசாயண பகுப்பாய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராகலை பொலிஸ் அறிக்கையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0