உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் விரைவாக விசாரிக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5000 முறைப்பாடுகளையும், அடுத்த ஆண்டு 6000 முறைப்பாடுகளையும் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் மற்றும் பொது விடயங்கள் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுமையான ஆதரவளித்துள்ளார்கள்.

வடக்குக்கு சென்றால் தமிழ் மக்கள் ஜனாதிபதியை அன்புடன் வரவேற்கிறார்கள். கடந்த காலங்களில் இவ்வாறான தன்மை காணப்படவில்லை. ஜனாதிபதியும் மக்களோடு மக்களாகவே செயற்படுகிறார்.

தமிழ் மக்கள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படவில்லை. இந்த நாட்டில் இனி ஒருபோதும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறாது என்பதற்கு உறுதியளிக்கிறோம். இனவாத முரண்பாடுகளினால்தான் இந்த நாடு பாரிய பின்னடைவை எதிர்கொண்டது” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0