உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கை முழுவதும் தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் திகதியிடப்பட்டு இலக்கம் 2490/06 இன் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுப் பாதுகாப்பு, மக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அதேவேளை ஒட்டுமொத்த பொதுமக்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் விநியோகங்கள் மற்றும் சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் ஏதுவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி இந்த வர்த்தமானி மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரசமைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களின் பிரகாரமே இந்த அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

45 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0