பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து நேற்று கடற்றொழிலிற்கு 2 படகுகளில் சென்ற 4 பேர் கரை திரும்பாத நிலையில் இன்று கலைமுதல் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதனால் படகுகள் விபத்திற்கு உள்ளகியிருக்கலாம் என மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
சக மீனவர்கள் தீவிர தேடும்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடர்ப்படையின் உதவி கோரப்பட்டது.
எனினும் இதுவரை அவர்களின் உதவி கிடைக்கவில்லை என தெரிவிக்கப் படுகின்றது