உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

யாழ்ப்பாணம் – சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நூதன முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர், 1800 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் தரப்பு தகவலின்படி, யாழ் நகரப் பகுதியில் “ஒன்லைன் கொரியர் சேவை” ஊடாக போதைப்பொருட்கள் மறைமுகமாக கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனவிரத்னவின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வில், கொழும்பிலிருந்து பொதியாக அனுப்பப்பட்ட ஒரு பார்சல் யாழ் குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்தது கண்டறியப்பட்டது.

அந்தப் பொதியை பொலிஸார் சோதனை செய்த போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1800 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், அந்த மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0