சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு.!
களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த உந்துருளி செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.