உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மட்டக்களப்பில் தீ விபத்து – இரு குழந்தைகள் பலி!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மட்டக்களப்பில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தையும், ஐந்து வயது நிரம்பிய பெண் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்த, பசறையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்தனர்.

குறித்த குழந்தைகளின் தாயார் புற்றுநோய்க்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்கள் பசறையிலிருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்து, தந்தையுடன் குறித்த விடுதியில் தங்கியிருந்தனர்.

இன்று மாலை அவர்களின் தந்தை குறித்த குழந்தைகளை அறையில் வைத்து மூடிவிட்டு, விடுதியின் கீழ்ப் பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், குறித்த அறையிலிருந்து புகை வெளிவருவதாக, தந்தைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு சென்ற அவர் மூச்சற்ற நிலையயில் காணப்பட்ட குழந்தைகளை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்.

எனினும் குழந்தைகள் இறந்திருப்பதாக வைத்தியசாலையினால் உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோன்று நேற்று காத்தான்குடி பகுதியில் நேற்று மாலை தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்ற அதே நேரம், இன்று காத்தான்குடி வைத்தியசாலையிலும் ஒரு தீ விபத்துச் சம்பவம் பதிவாகி இருக்கின்றமை குறிப்பிடத் தக்கது 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0