உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஹட்டனில் இருந்து கொழும்புக்கு தனியாக செல்ல எத்தனித்த 7 வயது சிறுவன் மீட்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பெற்றோரை சந்திப்பதற்காக ஹட்டனில் இருந்து தனியாக கொழும்பு செல்ல முற்பட்ட 7 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து நிலைய நேரக் காப்பாளரின் சாதுரியமான செயலினாலேயே இந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

 கொழும்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, தான் தனியாகப் பேருந்து மூலம் கொழும்புக்குச் செல்லப் போவதாக அந்தச் சிறுவன் நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். 

மேலும், கொழும்பு செல்வதற்காகத் தனது பெரியம்மா தனக்குக் காசு கொடுத்ததாகவும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

7 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாகக் கொழும்பு செல்ல முயன்றதைக் கண்டு சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், சிறுவனைப் பேருந்தில் ஏறுவதற்கு அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளார்.

 பின்னர் இது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளிடம் அச்சிறுவன் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0