உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்தமைக்குக் கண்டனம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமையானது ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகும் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

வவுனியா மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வரும் ஜனநாயக தேசிய கூட்டணி கட்சியின் பிரதி தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

ஒரு ஊடகவியலாளரின் கடமை உண்மைகளை வெளிக்கொணர்வதும், மக்களின் குரலை பதிவு செய்வதும் ஆகும்.

இவ்வாறான நிலையில் செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரை அழுத்தம் கொடுக்கும் வகையில் விசாரணைக்கு உட்படுத்துவது ஊடகத் துறையில் அச்சமான சூழலை உருவாக்கும்.

சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட வேண்டியது அவசியமானதாயினும், அதனை காரணமாகக் கொண்டு ஊடகச் செயற்பாட்டாளர்களை மிரட்டும் அல்லது கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

ஜனநாயக சமூகத்தில் கருத்துச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளாகும்.

ஊடக சுதந்திரத்தை மதிக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0