உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இரு சிறுநீரகங்களும் செயலிழப்பு; சிகிச்சைக்காக மக்களிடம் உதவி கோரும் முன்னாள் போராளி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
42 பார்வைகள்

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகத் தமிழ் மக்களின் நிதியுதவியை முன்னாள் போராளி ஒருவர் கோரி நிற்கிறார்.

முன்னாள் போராளியான எதிர்மன்னசிங்கம் கிரேசியன் என்பவருக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தடுப்பு முகாம்களிலும், சித்திரவதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர், தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்கையில்,
“எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சையை உடனடியாகச் செய்யாவிட்டால் எனது உயிர் பிரிந்துவிடும் அபாயம் உள்ளது.

அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவியும், பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.

இந்த அறுவை சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை. எனவே, எனது தமிழ் மக்கள் என்னை எந்நிலையிலும் கைவிடமாட்டார்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்,” என அவர் கண்ணீருடன் பணிவன்போடும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இந்த முன்னாள் போராளியின் சிகிச்சைக்கு உதவ விரும்பும் நற்பண்பாளர்கள், கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும்.

வங்கி விபரங்கள்:
பெயர்: எதிர்மன்னசிங்கம் கிரேசியன் (Ethirmannasingam Grashan)
வங்கி: இலங்கை வங்கி (BOC)
கிளை: கல்வியங்காடு
கணக்கு இலக்கம்: 94948569
தொலைபேசி இலக்கம்: 0775621613

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

34 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

41 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

28 0 0