இளங்குமரன் எம்.பியின் வலியுறுத்தலையடுத்து பலாலி வீதி ஊடான பயண நேரம் நீடிப்பு.!
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காணி விடுவிப்புக் கலந்துரையாடலில், 24 மணிநேரமும் பலாலி வீதியைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கை இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தொடர்ச்சியாக முன்வைத்த வலியுறுத்தலையடுத்து இரவு 8 மணிவரை வீதியைத் திறந்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது காலை 6 மணி தொடக்கம் இரவு 7 மணிவரை பலாலி வீதி பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.