உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குடும்பத் தகராறில் மனைவியை கொ*லை செய்த கணவன்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அனுராதபுரம், நொச்சியாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை வாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொடூரச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
நேற்று இரவு, கொலையாளியான 45 வயதுடைய கணவன் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதன் போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்கனவே இருந்த குடும்பத் தகராறு தொடர்பில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த கணவன், வீட்டிலிருந்த வாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கடுமையான வெட்டுக் காயங்களுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளியான கணவன் அப்பிரதேசத்தை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடியுள்ள சந்தேகநபரான கணவனைக் கைது செய்வதற்காக நொச்சியாகமை பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

32 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0