உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இருவேறு கொ*லைச் சம்பவங்கள்; பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இருவேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடை குற்றச்சாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மதுகம வெலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பின்னர் லிந்துலை பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கொழும்பு – ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலை உச்சியில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதுடைய பெண்ணொருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகிய இரு வழக்குகளுடனும், இவர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் லிந்துலை மற்றும் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0