உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கில் வெசாக் தன்சல், அலங்காரங்கள்; ஆளுநர் எந்தத் தடையும் விதிக்கவில்லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என வெளியாகும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களை செய்வதற்கும் அம்மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு – பகிரப்பட்டுவரும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“இது பொய்யான செய்தியாகும். தேசிய சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இப்படியான போலியான செய்திகளைத் தயாரித்த நபர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் சி.ஐ.டியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என நாமும் கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0