உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36 உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..

தமக்கு எவ்வித முன்னறிவித்தலும் இன்றி  வேதனம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனால் தாம் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் வாழ்வாதார ரீதியாக தாம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்டவர்கள்,

இம் மாதத்திற்கான வேதனம் நிறுத்தப்பட்டமையினால் தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக ஹட்டன் வலயக்கல்வி பணிமனையின் கடமை நிறைவேற்று கல்வி பணிப்பாளர் ஏ.சுமதியை தொடர்பு கொண்டு வினவியபோது,

சிலர் இடமாற்றம் பெற்று சென்றிருப்பார்கள் அல்லது இடமாற்றத்தினை பெற்று வந்திருப்பார்கள்.

அவர்களுடைய முழுமையான ஆவனங்கள் கிடைக்காத பட்சத்தில் இவர்களுக்கான இம் மாத சம்பளம் நிதி சுற்றறிக்கை அடிப்படையில்  நிறுத்தப்பட்டிருக்கும்.

தவிர ஹட்டன் வலயகல்வி பணிமனையின் ஊடாக சம்பளம் நிறுத்தப்படவில்லை என குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் நயனி எட்டியாரச்சியிடம் வினவியபோது அதற்கு பதில் அளித்த மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் இது தொடர்பாக எவ்வித முறைப்பாடும் தமக்கு கிடைக்கவில்லை எனவும்

இம்மாத சம்பளம் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு கூட எமக்கு வரவில்லை

இருந்தாலும் இது தொடர்பாக ஹட்டன் வலயக்கல்வி பணிமனையின் பணிப்பாளரோடு கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

35 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0