உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
39 பார்வைகள்

வடமாகாணத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திற்கு இன்று (26) வருகை தந்திருந்த பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரும், முப்படை தளபதிகளும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் இளங்குமரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பலாலி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

அத்துடன், வயாவிளான் இராணுவ வைத்தியசாலையில் காணிகள் விடுவிப்பது தொடர்பாக ஆராய்ந்தனர்.

அதேவேளை, பலாலியில் உள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தையும் பார்வையிட்டனர்.

அதன் பின்னர், மதியம் 3 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

கள ஆய்வு செய்ததுடன், கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அதன் பின்னர் மக்களின் காணிகள் மக்களுக்கே என்ற நோக்கமும் குறிக்கோளுக்கும் அமைவாக வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

அதே நேரம், பலாலியில் உள்ள பாடசாலை மற்றும் ஆலயங்களும் விடுவிக்கப்படவுள்ளதுடன், பாடசாலை மற்றும் ஆலயத்தை புனரமைப்பு செய்வதற்கான நிதி உதவிகளையும் இராணுவத்தினர் வழங்குவதாக தெரிவித்தனர்.

அதேவேளை, கீரிமலை மற்றும் வல்லை வீதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0