உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரேலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக  நுவரேலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்து காணப்பட்டன.

இந்நிலையில் தற்போது அங்கு  கன மழை பெய்து வருவதால் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை அண்மித்துள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 27.05 அடி மட்டுமே குறைவாக காணப்படுகின்றது.

விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 9 அடி மட்டுமே குறைவாக உள்ளது.

அத்துடன் கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 9 அடி குறைவாகவும்

லக்சபான நீர் தேக்க தத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட  8 குறைவாகவும்,

மேல் கொத்மலை நீர் தேக்கம்  கொத்மலை நீர் தேக்கம் ஆகியனவும் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

தொடர்ந்து நுவரேலியா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0