உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க சஜித்தும் நாமலும் பகற்கனவு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அணியினரும், நாமல் ராஜபக்ஷவின் தரப்பினரும் பகற்கனவு காண்கின்றனர் என்று ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர்களின் இந்தக் கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது அரசின் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் சகித்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் பொய்களையும் பரப்பி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு தரப்பினரும் தங்களின் அரசியல் வறட்சியை மறைப்பதற்காகவே, நாடு மீண்டும் பொருளாதாரப் படுகுழியை நோக்கிச் செல்வதாகக் கூறி நாடகமாடுகின்றனர்.

மக்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, நாட்டின் தூய்மையான நிர்வாகத்துக்காகப் பாடுபட்டு வரும் எமது அரசுக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.

எமது அரசானது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட, மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு பலமிக்க அரசாகும். ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய இந்த ஆணையை எந்தவொரு அரசியல் சக்தியாலும், பொய்ப் பிரச்சாரங்களாலும் அசைக்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்தவர்கள் மீண்டும் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பது வேடிக்கையானது. எமது அரசு தூய்மையான பயணத்தை எவ்வித தடங்கலுமின்றித் தொடரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0