உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று  நடைபெற்றது.

இங்கு 14 பயனாளிகளுக்கு உயர்தர மீன்பிடி வலைகளை வழங்கி உரையாற்றிய பிரதி அமைச்சர்,

தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் மக்கள் மீது மேலதிக சுமைகளைச் சுமத்திவிட்டு தட்டிக்கழிக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது எனத் தெரிவித்தார்.

இதில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அந்த நஷ்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு மீனவர்களைப் பாதுகாக்கிறது.

அமைச்சர்களின் எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் மேலதிக வரப்பிரசாதங்களைக் குறைத்து, அதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை நாம் மீனவர்களின் நலனுக்காகப் பயன்படுத்துகிறோம்.

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுசெய்யக் காலதாமதம் ஏற்பட்டமைக்குக் காரணம், மக்களுக்குத் தரமற்ற பொருட்களை வழங்காமல், எமது அமைச்சின் கீழள்ள நோர்த் சீ (Northsea) மற்றும் சீநோர் (Ceynor) நிறுவனங்கள் ஊடாக உயர்தர வலைகள் மற்றும் படகுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்தமையே ஆகும்.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 600 மில்லியன் டொலர்களாக உயர்த்துவதே எமது இலக்கு. அந்த இலக்கை அடைய வேண்டுமானால் உங்கள் வாழ்வாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும்,” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், கடல் மாசடைவதைக் குறைப்பதற்கு மீனவ சமூகம் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் எனவும், இயற்கைக்கு மதிப்பளித்து சமுத்திரத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் என்றும் அவர் இதன்போது நினைவுபடுத்தினார்.

இவ்வருட இறுதிக்குள் சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கி முடிக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சீநோர் நிறுவனத்தின் தலைவர் வசந்த மான்னப்பெரும உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாவட்ட மீனவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0