உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருட்களுடன் ஒரே நாளில் 998 பேர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மாத்திரம் 998 சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைக் குறிவைத்து நேற்று நாடு முழுவதும் 996 விசேட சோதனை நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த விசேட சோதனைகளின் போது போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 998 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையான முறையில் அடிமையாகியுள்ள நால்வர் அடையாளம் காணப்பட்டு, அவர்களைப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பொலிஸாரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸாரால் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 422 கிராம் ஹெரோயின், 3 கிலோகிராம் 53 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 219 கிராம் கஞ்சா, 7 கஞ்சா செடிகள், 25 கிராம் குஷ் ரக போதைப்பொருள், ஒரு கிலோகிராம் 225 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,027 போதை மாத்திரைகள், 252 கிராம் மதனமோதகம் மற்றும் 147 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் சந்ததியினரைப் போதைப்பொருள் அரக்கனிடமிருந்து பாதுகாப்பதற்காக ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த “முழு நாடுமே ஒன்றாக” தேசியத் திட்டம், வரும் நாட்களிலும் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0