உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிடுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

முற்றிலும் அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டே இந்த அபாண்டமான குற்றச்சாட்டு தற்போதைய அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவரான சுரேஷ் சலே எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானா, தனது புகலிடக் கோரிக்கையை வலுப்படுத்துவதற்காகக் கூறிய கட்டுக்கதைகளையும் வாக்குமூலத்தையும் அடிப்படையாகக் கொண்டே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தற்போது சுரேஷ் சலேவைப் பிரதான சூத்திரதாரியாகச் சித்திரித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் என்பதும், அவரே தாக்குதல்களை வழிநடத்தினார் என்பதும் இதற்கு முன்னர் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் நடத்தப்பட்ட பல்வேறு பாரிய விசாரணைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகள் ஊடாகத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில், இப்போது திடீரெனப் புதியதொரு விடயத்தைக் நீதிமன்றத்தில் குறிப்பிடுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்தும் ஒரு கீழ்த்தரமான செயற்பாடாகும்.

தற்போதைய அரசு கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தை முழுமையாக அரசியல்மயப்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் கத்தோலிக்க சபைக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் வழங்கிய போலி வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே அரசு தற்போது இவ்வாறு திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், 2019 இல் இந்தக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய உயர் பதவிகளில் இருந்துகொண்டு, தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள்தான் இன்று புதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அன்று கடமையைச் செய்யத் தவறியவர்கள் இன்று பிறிதொரு நேர்மையான அதிகாரி மீது பழிசுமத்துவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும்.

எனவே, அரசியல் தேவைகளுக்காகப் புலனாய்வுத் துறை அதிகாரிகளைப் பலிக்கடாவாக்குவதை நிறுத்தி, யதார்த்தமான முறையில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0