அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு.!
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை நகரில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் கிடைத்த தகவலுக்கமைய மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த மரணம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.