உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி இல்லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கையில் தற்போது உள்நாட்டு ரீதியில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை எனவும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 330 ரூபாய் அளவில் மிகவும் ஸ்திரமடைந்துள்ளது எனவும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடு மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் வாயிலாக வெளியாகி வரும் செய்திகளை முற்றாக நிராகரித்து, கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையையும், தற்போதைய நேர்மறையான சூழ்நிலையையும் ஒப்பிட்டுப் பேச முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில், கடந்த 2025 ஆம் ஆண்டானது இலங்கை வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆண்டாகப் பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக உள்நாட்டு நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட தற்காலிக ஏற்ற இறக்கங்கள் குறித்துப் பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

கடல்சார் பதற்றங்களால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்தமையே இந்தத் தற்காலிக மாற்றத்துக்குக் காரணமாகும், மாறாக உள்நாட்டுக் கொள்கை முகாமைத்துவக் குறைபாடு அல்ல.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் வதந்திகளைப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ வன்மையாக மறுத்தார்.

கடந்த 15ஆம் திகதி வரை 1,782 வாகனங்கள் மட்டுமே உத்தியோகபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தரவுகளை முன்வைத்து அவர் தெளிவுபடுத்தினார்.

நாட்டின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வரும் நாள்களில் இலங்கைக்குக் கிடைக்கவுள்ள சர்வதேச நிதி உதவிகள் குறித்த விவரங்களையும் அவர் வெளியிட்டார்.

இந்த அனைத்து சர்வதேச நிதி ஓட்டங்களும் திட்டமிட்டபடி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளதால், நாட்டின் டொலர் கையிருப்பு மற்றும் பொருளாதாரப் பாதையின் ஸ்திரத்தன்மை குறித்துப் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0