உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சற்றுமுன் விமல் வீரவன்ச கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மே 18 பத்தரமுல்ல தேசிய போர் நினைவுத்தூபி வளாகத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வாக்குமூலமளிக்க விமல் வீரவன்ச இன்று (25) திங்கட்கிழமை காலை தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், விசேட பொலிஸ் குழுவொன்றினால் தாம் கைது செய்யப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று பொலிஸில் ஆஜராகாத நிலையில், இன்று தலங்கம பொலிஸில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

கடந்த மே 18ஆம் திகதி, தேசிய போர் வெற்றித் தின நிகழ்வுக்கான ஒத்திகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவொன்று தேசிய போர் நினைவுத்தூபி வளாகத்திற்குள் நுழைய முயன்றது. இதனால் பொலிஸாருக்கும் அந்தக் குழுவினருக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து, ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கு கடமையில் இருந்த அதிகாரிகளின் பணிகளில் தலையிட்டதாகக் கூறி, விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0