உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் பசில் ராஜபக்ஷ முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ இன்றைய தினம் முன்னிலையாகாமை காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பசில் ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதனால் அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என வைத்திய அறிக்கைகளைச் சமர்ப்பித்துத் தெரிவித்தனர்.

எனினும், பசில் ராஜபக்ஷ தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சமூகமளிப்பதைத் தவிர்த்து வருவதனால், முன்வைக்கப்பட்ட காரணிகளை கருத்திற்கொண்டு, மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க, பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0