உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

17 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை; குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குச் சர்வதேச பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றைக் கோரி உலக நாடுகள் இலங்கை அரசுக்குக் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-
“கடந்தகால கொடூரமான மீறல்களால் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்த தமிழ் மக்களுடன் தோளோடு தோள் நிற்பதற்கும், இந்தத் துயரமிகு தருணத்தை நினைவுகூருவதற்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இங்கே நேரில் நிற்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.

இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். 17 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படவில்லை. தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாது தவிக்கும் குடும்பங்கள், குற்றவாளிகள் ஒருநாள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என இன்றும் நம்புகிறார்கள்.

பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அவை மட்டுமே போதுமானதாக இல்லை. உலக நாடுகள் இணைந்து வலுவான சர்வதேசப் பொறிமுறைக்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தற்போதைய அரசு கூட, ஆட்சிப் பீடமேறுவதற்கு முன்பதாகப் பொறுப்புக்கூறல் குறித்துப் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சரியான நேரம் இதுவாகும். 17 ஆண்டுகளின் பின்னராவது ஏதோவொரு வடிவில் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இலங்கை வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயத்திலிருந்து நாடு முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமானால், அரசு இந்த விவகாரத்துக்கு முதன்மை முன்னுரிமை அளிக்க வேண்டும்.” – என்று எலைன் பியர்சன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

30 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0